மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பட்ஜெட்டில் மத்திய பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்காததை கண்டித்து தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன.
மத்திய பா.ஜ.க. அரசை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக பா.ஜ.க. மற்றும் அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது

இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகரங்களிலும், மத்திய, நகர, பேரூர் அளவில், தமிழ்நாடு முழுவதும் 1,500க்கு மேற்பட்ட இடங்களில் இன்று மாலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் மத்திய பாஜக அரசு மற்றும் அதிமுகவைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி (திமுக கூட்டணி) கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க., சி.பி.எம்., சி.பி.ஐ., முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் கலந்துகொண்டுள்ளன.

முன்னதாக இதுதொடர்பாக வெளியிடப்பட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த பா.ஜ.க. - இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

* "வரி மட்டும் வேண்டும்.. நிதி தர முடியாதா?" - மத்திய அரசை எதிர்த்துத் தமிழ்நாடு முழுவதும் திமுக கூட்டணி முழக்கம்.

* கல்வி நிதி ரூ.3,458 கோடி எங்கே? குடிநீர் நிதி ரூ.3,000 கோடி எங்கே? - மத்திய அரசிடம் அடுக்கடுக்கான கேள்விகள்.

* தமிழ்நாட்டிற்கு 'பூஜ்ஜியம்' நிதி ஒதுக்கித் துரோகம் இழைத்த பா.ஜ.க. - துணை போகும் அ.தி.மு.க.

* "டெல்லியின் டப்பா எஞ்சின் தமிழ்நாட்டில் ஓடாது!"

* "மோடியே! ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! 100 நாள் வேலையை நிறுத்தாதே!"

* "எங்கே? தமிழ்நாட்டின் நிதி எங்கே? மோடியே அல்வா கொடுக்காதே!"

* "டெல்லிக்கு அஞ்சோம்.. அடிபணியோம்.. தமிழ்நாடு தலைகுனியாது!"

* "துரோகி பழனிசாமி.. டெல்லி அடிமைசாமி!" - அதிமுகவைக் கடுமையாகச் சாடும் பதாகைகள். நிதி மற்றும் புள்ளிவிவரங்கள் (Financial & Statistical Focus)

* வரிப் பகிர்வு: "நாங்கள் கொடுப்பது 1 ரூபாய்.. பாஜக அரசு தருவதோ வெறும் 29 பைசா" - தமிழ்நாட்டின் நிதி உரிமைப் போர்.

* பாரபட்சம்: "உபி-க்கு 2.50 ரூபாய்.. பீகாருக்கு 7 ரூபாய்.. தமிழ்நாட்டிற்கு மட்டும் ஓரவஞ்சனை" - பட்ஜெட் புள்ளிவிவரம்.

* கடன் சுமை: மெட்ரோ திட்டத்திற்கு நிதி தராமல் ரூ.63,000 கோடி கடனைத் தமிழ்நாடு அரசு மீது சுமத்திய மத்திய அரசு.

* கல்வி உரிமை: புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் ரூ.3,458 கோடி 'சமக்ர சிக்ஷா' நிதியை நிறுத்தி மிரட்டல்.

விவசாயம் & தொழிலாளர் நலன் (Farmers & Labor Issues)

* விவசாயிகள் ஷாக்: அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மூலம் இறக்குமதிக்கு அனுமதி - தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் மத்திய அரசு.

* வேலைவாய்ப்பு: 100 நாள் வேலைத் திட்ட நிதியைக் குறைத்து கிராமப்புற ஏழைகளுக்குத் துரோகம் - கண்டன ஆர்ப்பாட்டம் தீவிரம்.

* மீனவர் பிரச்சனை: கச்சத்தீவை மீட்க நடவடிக்கை இல்லை - மீனவர் தாக்குதலுக்குத் தீர்வு காணாத மத்திய அரசு.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com