சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்

செவப்பெருந்தகை, திருமாவளவன், எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்
Published on

சென்னை,

கியாஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலை தி.மு.க. நேற்று வெளியிட்டது.

அதன்படி, சென்னை கிழக்கு - அமைச்சர் சேகர்பாபு, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை, சென்னை வடக்கு- இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் வீரபாண்டியன், சென்னை மேற்கு- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர், மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி, சென்னை தெற்கு- அமைச்சர் மா.சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்,

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சென்னை மேற்கு- தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, சென்னை தென்மேற்கு- மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், சென்னை வடகிழக்கு- எஸ்.டி.பி.ஐ. தலைவர் நெல்லை முபாரக், காஞ்சீபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com