தளபதி வாழ்க ...! பாரத் மாதா கி ஜே ...! தி.மு.க. மற்றும் பாஜக தொண்டர்கள் போட்டி கோஷம் - பரபரப்பு

Published on

சென்னை

ஹைதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

ரயில்வே, சாலை உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்னும் சற்று நேரத்தில் சென்னை வருகை தருகிறார்.

மாலை 5.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்வில் கலந்துகொள்ள வருகிறார்.

பிரதமர் மோடியை வரவேற்க 20க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது. மாநிலம் முழுவதும் இருந்து 10,000-க்கும் மேற்பட்ட பாஜகவினர் சென்னையில் முகாமிட்டுள்ளனர். வழியெங்கும் பாஜக கொடிகளோடு தாரை தப்பட்டை முழங்க பிரதமர் மோடியை வரவேற்க தொண்டர்கள் தயாராக உள்ளனர். மேளதாளம், கலை நிகழ்ச்சிகள், பதாகைகள், மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

நேரு அரங்கம் செல்லும் வழியெங்கும் பா.ஜ.க.வினர் சூழ்ந்துள்ள நிலையில், திமுக தொண்டர்கள் அங்கு உள்ளனர். வாழ்க வாழ்க வாழ்கவே அய்யா பெரியார் வாழ்கவே, தளபதி வாழ்க டாக்டர் கலைஞர் வாழ்கவே என தி.மு.க.வினர் ஒரு பக்கம் முழக்கமிட, பாரத் மாதா கி ஜே என பாஜகவினர் முழக்கமிடுகின்றனர். அதுபோலவே நாளைய முதல்வர் அண்ணாமலை வாழ்க என்றும் பாஜகவினர் உற்சாக முழக்கம் எழுப்பினர். பிரதமரும் முதலமைச்சரும் விழாவில் பங்கேற்பதால் திமுக கொடிகளும் பாஜக கொடிகளும் அருகருகே கட்டப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com