திருச்சியில் முக ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம்

சட்டப்பேரவையில் திமுகவினர் வெளியேற்றப்பட்டதை கண்டித்து திருச்சியில் முக ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சியில் முக ஸ்டாலின் தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏக்கள் குண்டு கட்டாக வெளியேற்றப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது. திருச்சியில் தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை பகுதியில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் உண்ணா விரத போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் 4 இடங்களில் திமுகவினர் உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com