சென்னை மாநகராட்சி கூட்டத்தில் திமுக-பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம்

உமா ஆனந்தின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டம் ரிப்பன் மாளிகையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயர் ஆர்.பிரியா தலைமை வகித்தார். இதில், திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்கள் பங்கேற்று இருந்தனர். தங்கள் ட், அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து ஆ.ராசா எம்.பி. அவமரியாதையாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்து கேள்வி நேரத்தில் உமா ஆனந்த் பேசினார்.
உமா ஆனந்தின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கு பாஜகவைச் சேர்ந்த மாநகராட்சி உறுப்பினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திமுக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் கேள்வி விவாதத்தின் போது, இது போன்று விவகாரங்களை எழுப்பக்கூடாது என்று மாநகராட்சி துணை மேயர் அறிவுறுத்தினார். ஆனால், இதையும் மீறி திமுக, பாஜக உறுப்பினர்கள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால், சென்னை மாநகராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம், மாநகராட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் இடையே முகச் சுழிப்பை ஏற்படுத்தியது.






