தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஜனாதிபதியை அழைக்காததை கண்டித்து தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Published on

பந்தலூர்,

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நேற்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி திரவுபதி முர்முவை அழைக்காததை கண்டித்து தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பந்தலூர் அருகே சேரங்கோடு சோதனைச் சாவடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு ஜனாதிபதியை அழைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பப்பட்டது. இதில் நாகையா வடிவேல் (தி.மு.க.), கவுன்சிலர் முத்துசாமி, பன்னீர்செல்வம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com