பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் புகார்

மகளிர் உரிமை திட்டப் பயனாளிகளை பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு இழிவுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க.வினர் புகார்
Published on

சென்னை,

தமிழக அரசு கொண்டு வந்து உள்ள கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை குறித்து நடிகையும், பா.ஜனதா நிர்வாகியுமான குஷ்பு சர்ச்சை கருத்து தெரிவித்து இருந்தார். இந்த கருத்துக்கு தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவருடைய உருவ பொம்மையை எரித்து தி.மு.க.வினர் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கொச்சைபடுத்தும் வகையில் பேசிய பா.ஜ.க. நிர்வாகி குஷ்பு மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை காந்திபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தி.மு.க. மகளிர் அணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com