நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? கே.எஸ்.அழகிரி பதில்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு பேசுகிறார்.
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? கே.எஸ்.அழகிரி பதில்
Published on

அதில், காங்கிரஸ் தலைவர்கள் சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மீதான கவனத்தை திசை திருப்பவே காங்கிரஸ் கட்சி விலைவாசி உயர்வுக்கு எதிராக போராட்டம் நடத்துகிறதா? என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், 'நேஷனல் ஹெரால்டு' வழக்கில் எல்லாம் முறைப்படியாக நடந்து உள்ளதாகவும், இதில் பணப்பரிமாற்றம் நடைபெறவே இல்லை என்றும், இந்த விஷயத்துக்கும் விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து புகழ்ந்து வரும் நிலையில், தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி வருகிற நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், இதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய அவர், இதை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் அவர் பேசுகையில், கடந்த முறை பிரதமர் மோடி வந்த போது தமிழகநலன் குறித்து மட்டுமே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமரிடம் பேசினார் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த முறை பிரதமர் வந்த போது, செஸ் ஒலிம்பியாட் சர்வதேச நிகழ்வு என்பதால் அவருக்கு உரிய முறையில் முதல்-அமைச்சர் வரவேற்பு கொடுத்து பாராட்டி பேசியதில் தவறு இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. விவகாரம், துணை ஜனாதிபதி தேர்தலில் காங்கிரசின் நிலைப்பாடு உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தான நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விரிவாகவும் அவர் பதிலளித்துள்ளதை கேட்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com