2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு

2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்பு குழு அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு ஏறக்குறைய இன்னும் இரண்டு வருடங்கள் உள்ள நிலையில், திமுக இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அதாவது, 2026 சட்டமன்ற தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் அமைச்சர் கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com