

இட்டமொழி:
நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மன்னார்புரத்தில் தமிழக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க துண்டுபிரசுரங்களை பொதுமக்கள், வியாபாரிகள், பஸ்சில் பயணம் செய்யும் பயணிகளிடம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. துண்டுபிரசுரங்களை நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு பொதுமக்களிடம் வழங்கி தி.மு.க. அரசின் சாதனைகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் நல்லாசிரியர் எம்.ஆர்.அகஸ்டின் கீதராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எஸ்.அருள்ராஜ் டார்வின் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.