மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது


மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
x
தினத்தந்தி 7 Jun 2025 11:12 AM IST (Updated: 7 Jun 2025 12:57 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் பணிகள் தொடர்பாக நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்குகிறார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், பாராளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தி.மு.க. தொடங்கி உள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை தி.மு.க. உறுப்பினர்களாக இணைப்பதற்கு வியூகம் வகுத்துள்ளது. 2026 சட்டசபை தேர்தல் பணிகள் தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்கள் வழங்குகிறார்.

1 More update

Next Story