முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆளும் கட்சியான திமுக, கடந்த ஓராண்டுக்கு முன்னரே பூத் கமிட்டி அமைத்தல், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகரிக்கும் நிகழ்வுகள், உடன்பிறப்பே வா என கட்சியினரை ஒருங்கிணைக்கும் நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

இதுதவிர கட்சியில் ஒருங்கிணைப்புக்கான குழுவும் அமைக்கப்பட்டது. கனிமொழி எம்பி தலைமையில் தற்போது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவும் அமைக்கப்பட்டு, அக்குழுவினர் அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணி தொடர்பாகவும், தேர்தல் கூட்டணி, பரப்புரை வியூகம் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. மேலும் மாவட்ட செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com