மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
எஸ்.ஐ.ஆருக்கு பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செனனை,
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், நாளை மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் "தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம்" 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.
அதுபோது மாவட்டக் கழகச் செயலாளர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
பொருள்: வரைவு வாக்காளர் பட்டியல் (Draft Electoral Rolls- SIR 2026) சரிபார்த்தல் குறித்து.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story








