திமுக - தேமுதிக பொருந்தாத கூட்டணி - தமிழிசை சவுந்தரராஜன்

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. சென்றதால் இரு கட்சிகளுக்கும்தான் பின்னடைவு என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திமுக - தேமுதிக பொருந்தாத கூட்டணி - தமிழிசை சவுந்தரராஜன்
Published on

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பா.ஜனதா மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வருவார். ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது எதிர்த்த ஒரே கட்சி தி.மு.க. கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை எதிர்த்தார்கள். ஆனால் ஜெயலலிதாவால் முதல்-அமைச்சராக்கப்பட்ட ஒருவர், மீண்டும் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வருவார் என்று கூறுவது அநீதியின் உச்சக்கட்டம்.

விஜய் கட்சியில் போட்டியிட தயங்குகின்றனர். தோல்வியை திசை திருப்ப அருண்ராஜ் பேசுகின்றார். அவருக்குதான் அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. 50 ஆயிரம் பேர் விருப்ப மனு வாங்கி சென்றதில் 500 பேர் கூட வராததால் மன அழுத்ததில் உள்ளனர். அவருடைய மன அழுத்தத்தை பா.ஜனதா அழுத்தம் என்கிறார்.

தி.மு.க.வுடன் தே.மு.தி.க. சென்றதால் இரு கட்சிகளுக்கும்தான் பின்னடைவு. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையாக உள்ளது. தி.மு.க.வை விஜயகாந்த் எதிர்த்தார். தேர்தல் முடிவுகள் இதை எதிரொலிக்கும். தி.மு.க.-தே.மு.தி.க. பொருந்தாத கூட்டணி. கூட்டணிக்கு யார் வந்தாலும் அவர்களை வரவேற்க வேண்டிய சூழ்நிலையில் தி.மு.க. இருக்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com