இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
Published on

மதுரை,

மதுரையில் இன்று நடைபெற்ற குடியிரிமை சட்டம் குறித்த விளக்க கூட்டத்தில் மத்திய பெண்கள் மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;-

இலங்கை தமிழர்களுக்காக, மனிதாபிமான அடிப்படையில் கூட திமுக செயல்படவில்லை. திமுகவிற்கு இந்துக்களை பிடிக்காது, காங்கிரஸ்காரர்களுக்கு சீக்கியர்களை பிடிக்காது. ஆனால் இவர்களுக்கு மத்திய அரசு, குடியுரிமை சட்டத்தில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

திருவள்ளுவர் மண்ணிலிருந்து கேட்கிறேன், திமுக ஏன் பாகிஸ்தானை ஆதரிக்கிறது? வரலாற்றுப் பிழைகளை சரி செய்யும் பணிகளை மத்திய அரசு செய்யும் என்பதை உறுதியாக கூறுகிறேன் என்று அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com