ரூ. 400 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடந்த மாதம் 26ம் தேதி போலீசார் கைது செய்தனர்.
ரூ. 400 கோடி லஞ்சம்: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
Published on: 

சென்னை,

ரூ. 400 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 400 கோடி லஞ்சம்

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

இதனிடையே, கடந்த திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பள்ளிகள் தரம் உயர்த்துதல் மற்றும் இதர அரசு அனுமதிகளை பெற்றுத்தருவதாக கூறி ரூ. 400 கோடிக்கும் மேல் லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.

கோர்ட்டில் சரண்

இந்த புகார் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடந்த மாதம் 26ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த ரூ. 400 கோடி லஞ்ச வழக்கில் விருத்தாச்சலம் தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாரும் 2வது எதிரியாக சேர்க்கப்பட்டார். அவர் கடந்த 29ம் தேதி கோர்ட்டில் சரணடைந்தார்.

இதையடுத்து, அவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை ஊழல் தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முத்துக்குமாரை வரும் 26-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் மீண்டும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ஒரு வழக்கு

இந்நிலையில், ரூ. 400 கோடி லஞ்ச வழகில் திமுக முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மீது ஏற்கனவே சென்னை, சேலத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ரூ. 400 கோடி லஞ்ச வழக்கில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் மீது நாமக்கல் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக முத்துக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனுதாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X