மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம்

திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் வருகிற 22-ந்தேதி நடைபெறுகிறது.
மு.க.ஸ்டாலின்
கோப்புப்படம்
Published on

சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 22-ந்தேதி திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 22-08-2026 சனிக்கிழமை காலை 10 மணியளவில் திமுக தலைமைச் செயற்குழு கூட்டம் சென்னை, கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com