தி.மு.க. கொடியேற்று விழா

செங்கோட்டையில் தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது
தி.மு.க. கொடியேற்று விழா
Published on

செங்கோட்டை:

செங்கோட்டை மேலூர் முத்தழகி அம்மன் கோவில் தெருவில் நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நகரின் முக்கிய பகுதிகளில் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நகரச்செயலாளா வழக்கறிஞா ஆ.வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர்மன்ற தலைவா ராமலட்சுமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.ரஹீம், ஒன்றிய செயலாளர் ஆ.ரவிசங்கர், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வழக்கறிஞர் மு.ஆபத்துக்காத்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனா.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளா வழக்கறிஞா பெ.சிவபத்மநாதன் கட்சி கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். முன்னதாக கழகப் பேச்சாளர்கள் நெல்லை ரவி, செங்கை குற்றாலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினா. பின்னா 8, 10-வது வார்டு பகுதிகளில் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் காதர் அண்ணாவி, மாவட்ட மகளிர் அணி தலைவர் பேபி ரஜப் பாத்திமா மற்றும் பலர் கலந்துகொண்டனர். வார்டு செயலாளா ஆ.சண்முகராஜா நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com