முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் பறக்கும் திமுக கொடிகள்


முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் பறக்கும் திமுக கொடிகள்
x

முதல்-அமைச்சரை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் திமுக கொடிகள் பறக்கின்றன.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நாளை (திங்கட்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை கன்னியாகுமரிக்கு வருகிறார். தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். மு.க.ஸ்டாலினுக்கு குமரி மாவட்ட திமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

கன்னியாகுமரிக்கு வந்ததும் மாலை 6 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலின் நடுவே அமைந்துள்ள அய்யன் திருவள்ளுவர் சிலையை பார்வையிடுகிறார். பின்னர் திருவள்ளுவர் சிலைக்கும், கடலின் நடுவே மற்றொரு பாறையில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே ரூ.37 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி நடைபாலத்தையும் திறந்து வைக்கிறார். பிறகு திருவள்ளுவர் சிலையில் அமைக்கப்பட்டுள்ள லேசர் ஒளி காட்சியை அவர் கண்டுகளிக்கிறார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கன்னியாகுமரி கடலில் திமுக கொடிகள் பறக்க விடப்பட்டு உள்ளன. இந்த கொடிகள் கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல் காட்சி கோபுரம் வரை உள்ள கடல் பகுதியில் மிதவைகள் மூலம் பறக்க விடப்பட்டு உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை திமுகவினர் செய்துள்ளனர்.

1 More update

Next Story