தி.மு.க. பொதுக்கூட்டம்

நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
தி.மு.க. பொதுக்கூட்டம்
Published on

நெல்லை மேலப்பாளையத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு மற்றும் சிறுபான்மை நல உரிமை பிரிவு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர் நவ்சாத் தலைமை தாங்கினார்.

இதில் திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். அவர் பேசுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் வலுவான வெற்றியை பெற்றுத்தரும் நம்பிக்கையை இந்தியா கூட்டணி உருவாக்கியுள்ளது. 2024-ல் இந்தியா கூட்டணி வெல்லும். பா.ஜனதாவுக்கு இனி இடமில்லை. தமிழகத்திலும் தி.மு.க. கூட்டணி 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்றார்.

கூட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், மாநில வர்தகர் அணி இணை செயலாளர் மாலைராஜா, மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த், மேயர் பி.எம்.சரவணன், மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நெல்லை பேட்டை பகுதி தி.மு.க. சார்பில் டவுன் குளப்பிறை தெருவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெல்லை மாநகர தி.மு.க. செயலாளர் சு.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நெல்லை பேட்டை பகுதி செயலாளர் நமச்சிவாயம் கோபி வரவேற்றார். இதில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் பேசினார்கள். இதில் மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணைத்தலைவர் நடிகர் வாசு விக்ரம் கலந்து கொண்டு பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com