பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் தி.மு.க. அரசு சறுக்கலை சந்தித்துள்ளதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

ஹலோ எப்.எம்.மில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட்லைட்’ நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசுகிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் தி.மு.க. அரசு சறுக்கலை சந்தித்துள்ளதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
Published on

அதில், தற்போதைய கொரோனா 3-வது அலையை பொறுத்தவரையில் முதல் இரண்டு அலைகளை போல் அல்லாமல் இதில் தொற்று பரவும் வேகம் அதிகமாக இருந்தாலும் பெரும்பாலானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதால் உயிரிழப்புகள் குறைவான அளவிலேயே உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கியதில் தி.மு.க. அரசு சறுக்கலை சந்தித்து வருகிறதா? என்ற கேள்விக்கு பதில் அளிக்கையில், 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்குவதில் சிறு, சிறு குழப்பங்கள் இருந்திருக்கலாம் என்றும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் திடீர் ஆய்வுகள் மூலம் அவை களையப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

புதிய மருத்துவக்கல்லூரி விவகாரம் மற்றும் 27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி மறைப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்து உள்ள அவர், மருத்துவக்கல்லூரிகளை பொறுத்தவரையில் யார் ஆட்சி காலத்தில் மருத்துவ கட்டமைப்புகள் கொண்டு வரப்பட்டது என்ற தரவுகள் உள்ளதாகவும், யார் ஸ்டிக்கர் ஆட்சி என்பதை பொதுமக்கள் பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைகள், உள்துறை அமைச்சருக்கு எதிரான தி.மு.க.வின் விமர்சனம் உள்பட சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்தான நிகழ்ச்சி தொகுப்பாளர் ராஜசேகரின் கேள்விகளுக்கு விரிவாக பதில் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com