“வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் திமுக அரசு” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
“வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரும் திமுக அரசு” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
Published on

சென்னை,

சென்னை, தலைமைச் செயலகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அதிகார அமைப்பின் முதல் கூட்டம் நடைபெற்றது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு, துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காவிரி டெல்டா மிகவும் செழிப்பான பகுதி. மிகப்பெரிய வேளாண் மண்டலமாக காவிரி டெல்டா பகுதி திகழ்கிறது. காவிரி நீரை பெற சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். வேளாண்மைக்கு மிக முக்கிய பகுதியாக இருந்தாலும், பல்வேறு நெருக்கடிகளும் உள்ளது.

வேளாணமைக்கு அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டமாக இருந்தாலும் அமல்படுத்துகிறோம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் வேளாண்மையை பாதிக்கும் எந்த ஒரு ஆலைக்கு திமுக அரசு அனுமதி அளிக்காது.

வேளாண்மைக்கு திமுக அரசு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்தக் கூட்டம். வேளாண்மைக்கு திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com