‘தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமானது’ - பியூஷ் கோயல்

தி.மு.க. ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகி விட்டனர் என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் வரும் 23 -ந்தேதி நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மத்திய மந்திரியும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான பியூஷ் கோயல் பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
“பிரதமர் மோடி பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வையிட்டேன். இந்த பொதுக்கூட்டத்த்தில் ஒரே மேடையில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பங்கேற்கினர்.
பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டம், ஊழல் தி.மு.க. அரசின் முடிவுக்கான தொடக்கமாகும். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. ஆட்சியை அகற்ற தமிழக மக்கள் தயாராகி விட்டனர்.
தி.மு.க. அரசு இந்துக்களுக்கு விரோதமானது. உதயநிதி ஸ்டாலினின் சனாதன தர்மம் குறித்த பேச்சு தொடர்பாக கருத்து பதிவிட்ட பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் மீதான வழக்கை ஐகோர்ட்டு ரத்து செய்துவிட்டது.”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






