பட்டியலின மக்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு

தி.மு.க.வை, வீட்டுக்கு அனுப்பிவைப்பதை தவிர வேறு வழி யில்லை என எல்.முருகன் தெரிவித்தார்.

பட்டியலின மக்களை தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது: எல்.முருகன் குற்றச்சாட்டு
Published on

சென்னை,

மத்திய மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் தி.மு.க. அரசு பதவியேற்ற நாள் முதலே, தென் மாவட்டங்களை பதற்றத்தில் வைத்திருக்கிறது. நெல்லை மாவட்டத்தில் அடுத் தடுத்து நடந்து வரும் வன்முறை சம்பவங்களும், மோதல்களும் இதற்கு உதாரணம். நாங்குநேரி யில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்துள்ளது. அப்போதே போலீசார் குற்ற வாளிகளை கைது செய்திருக்க வேண்டும். அப்ப டிச் செய்திருந்தால் மீண்டும் வன்முறை நிகழாமல் தடுத்திருக்க முடியும். இன்றைக்கு 2 உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் பட்டியலின மாணவன் சின்னத்துரை, உடன் படிக்கும் மாணவர்களால் கொலைவெறி தாக்குத லுக்கு உள்ளானார். அப்போதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுபோலவே தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின சமூக இளைஞர் கவின், நெல்லை அருகே பட்டப்பக லில் படுகொலை செய்யப்பட்டார். அனைவரையும் வெட்கித் தலைகுனியச் செய்த அந்த ஆணவப் படுகொலை வழக்கில் இன்னும் நடவடிக்கை எடுக் கப்படவில்லை. இப்படி ஒரு அவல ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கும் தி.மு.க.வை, தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்பிவைப்பதை தவிர வேறு வழி யில்லை. இந்த அரசை வீழ்த்த, தமிழக மக்கள் இப்போதே தயாராகிவிட் டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com