திமுகவின் ஆட்சி தமிழ்நாட்டில் விரைவில் உதயமாகத்தான் போகிறது: மு.க.ஸ்டாலின் பேச்சு

சினிமாவில் ஹீரோவாக இருந்த விஜய் நிஜத்தில் வில்லனாக வலம் வருகிறார் என்று முக ஸ்டாலின் விமர்சித்தார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
Published on: 

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தவெக அரசு மோசமாக உள்ளதால், தற்போதும் நான் தான் முதல்-அமைச்சர் என கூறாதீர்கள். தவெக தலைமையிலான மோசமான ஆட்சியின் காரணமாக விரைவில் திமுகவின் ஆட்சி தமிழ்நாட்டில் உதயமாகத்தான் போகிறது. மாற்றம், மாற்றம் என்று சொன்னார்கள். ஆனால், தமிழக மக்களுக்கு ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. தவெக ஆட்சி வெற்று சீன் போடும் ஆட்சியாக உள்ளது.

நிஜ வாழ்க்கையில் வில்லன்

சினிமாவில் ஹீரோவாக இருந்த விஜய் நிஜத்தில் வில்லனாக வலம் வருகிறார். பாலியல் வழக்கில் தவெக நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். தவெக கட்சிக்கு பாலியல் சுரண்டல் கழகம் என்றுதான் பெயரை வைக்க வேண்டும். தூய சக்தி, தூய சக்தி என்று சொல்லி இன்று கொடுமையான ஆட்சியை தவெக நடத்தி வருகிறது. மனு கொடுக்க வந்த சாமானிய மனிதரை துணை சபாநாயகர் தாக்குகிறார்.

விரைவில் முடிவு

எங்கு பார்த்தாலும் பாலியல் கொடுமைகள் நடக்கின்றன. மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. கனிமொழிதான் அதை முதன்முதலில் வெளிக்கொண்டு வந்தார். அதற்குப் பிறகுதான் இந்த சம்பவம் வெளியே வந்தது. இதுபற்றி கூட முதல்-அமைச்சர் வாய் திறக்க மறுக்கிறார். அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று சட்டத்துறை அமைச்சர் சொல்கிறார். இன்னும் சில அமைச்சர்கள் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்கிறார்கள். இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு கட்ட விரைவில் ஒரு நல்ல சூழல் அமைய இருக்கிறது. அதற்கு நாம் இப்போதே தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X