வள்ளலார் வழியில் ஏழை மக்களுக்காக திமுக அரசு செயல்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
வள்ளலார் வழியில் ஏழை மக்களுக்காக திமுக அரசு செயல்படுகிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவில் மைதானத்தில் நடைபெற்று வரும் அனைத்துலக வள்ளலார் மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த சிறப்பு மாநாட்டில் பல்வேறு ஆன்மீகப் பெரியோர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வள்ளலார் சர்வதேச மையத்தின் முடிவுற்ற கட்டுமானப் பணிகளைக் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு "வள்ளலார் நெடுஞ்சாலை" என புதிதாக பெயர் சூட்டி பெயர்ப்பலகையை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

அனைத்துலக வள்ளலார் மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பாராட்டுகள். நம் சேகர் பாபுவை பொறுத்தவரை கழகப்பணியிலும், அரசின் சார்பில் நடைபெறும் ஆன்மீகப் பணியிலும் சிறப்பாக ஈடுபட்டு, தான் ‘செயல்’ பாபு என்று நிரூபித்து வருகிறார்.

தமிழ் சமூகத்தில் உதித்த புரட்சியாளர் வள்ளலார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று சொல்லி உலகிற்கே ‘தனிப்பெரும் கருணை’ என்ற அன்பு வழியை போதித்தவர் வள்ளலார். அவர் வழியில்தான் திராவிட மாடல் அரசும் ஏழை எளிய மக்களின் பசியை ஒழிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வள்ளலாரின் உயரிய கருத்துகளை, வாழ்வியல் நெறிகளை உலகெங்கும் போற்றிடும் வகையில் அனைத்துலக வள்ளலார் மாநாடு நடைபெறுகிறது. ரூ.8,000 கோடி மதிப்பிலான கோயில் சொத்துகள் மீட்டு சாதனை படைத்துள்ளோம். 864 கோயில்களில் ஒரு வேளை அன்னதான திட்டம் அமலில் உள்ளது. வள்ளலார் கோட்பாடுகளுக்கு செயல் வடிவம் கொடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள 8 அறிவிப்புகள்:-

* அனைத்துலக வள்ளலார் மாநாட்டின் நினைவாக காஞ்சி ஏகாம்பரநாதர் பள்ளியில் நினைவுத்தூண் அமைக்கப்படும்.

* வடலூரில் சன்மார்க்க பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டு அப்பள்ளியில் திருவருட்பா இசை பயிற்சியும் அளிக்கப்படும்.

* வடலூரில் வள்ளலார் பெயரில் மூலிகை தோட்ட்டம் அமைக்கப்படும்

* Spiritual Alchemy என்ற வள்ளலாரின் புத்தகம் அறநிலையத்துறையின் பதிப்பகத்தின் மூலமாக வெளியிடப்படும்

* வள்ளலார் பிறந்தநாளையொட்டி ஆண்டுதோறும் 3 நாட்கள் விழா நடத்தப்படும்.

* மேட்டுக்க்குப்பம், மருதூர் மற்றும் கருங்குழி ஆகிய ஊர்களில் வள்ளலார் பெயரில் அன்னதான கூடங்கள் திறக்கப்படும்.

* கடலூர் ஆட்சியர் அலுவலகத்தின் அருகில் அமைய உள்ள பூங்காவிற்கு வள்ளலார் பெயர் சூட்டப்படும்.

* சென்னையில் அறநிலையத்துறை வளாகத்தில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com