தமிழக மக்களின் பாதுகாப்பை பற்றி திமுக அரசுக்கு துளியும் கவலை இல்லை - எல்.முருகன்

தமிழக அரசு தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எல்.முருகன் கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். தீவிரவாதத் தாக்குதல் எனும் கொடூர உச்சத்திற்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருப்பது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு என்ன செய்தது? டெல்லி போலீசார் வந்து கைது செய்யும் வரை தமிழக போலிசார் என்ன செய்துகொண்டு இருந்தனர்?

Also Read
பெற்றோர் வீட்டில் தங்கியதற்காக மனைவியை அறைந்தது கொடுமையாகாது - குஜராத் ஐகோர்ட்டு
கோப்புப்படம்

தமிழகத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த மத்திய என்ஐஏ அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு தீவிரவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு, கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக பயங்கரவாத தாக்குதலை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து, பலரை கைது செய்து, தீவிரவாதத் தாக்குதல் என்பதை உறுதி செய்தது.

பல்வேறு வெடிபொருள்கள், ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு, 13 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் என அனைத்தும் அம்பலமானது. ஆனால் குண்டுவெடிப்பு என்பதை ஏற்க மறுத்து சிலிண்டர் வெடிப்பு என்று இன்றளவும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் கூறி வருகின்றனர்.

Also Read
ஒரே நாளில் திருமணம்... சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு - அதிர்ச்சி சம்பவம்
கோப்புப்படம்

தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கு மக்களின் பாதுகாப்பை பற்றி எந்த கவலையும் இல்லை. பயங்கரவாதத்ததை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் நபர்கள், அமைப்புகளுக்கு மறைமுக ஆதரவு அளித்து வருகிறது. வாக்குவங்கி அரசியலுக்காக மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிடும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுகவைப் போலவே, அவர்களது பங்காளிகளும் இதையே செய்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய கோரி ஓயாது விஷம பிரசாரம் செய்து வருபவர்களும் திமுக கூட்டணி கட்சியினரே. தமிழக மக்கள் அனைவருமே விழித்துக் கொள்ள வேண்டிய தருணமிது. பயங்கரவாத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராகவும் கரம் கோர்த்து மக்கள் செயலாற்ற வேண்டும்.

Also Read
நடுரோட்டில் மணமகளை துப்பாக்கி முனையில் கடத்திய முன்னாள் காதலன்... திகைத்து நின்ற மாப்பிள்ளை
கோப்புப்படம்

அனைவரும் வேறுபாடு இல்லாமல் பயங்கரவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வுடன் ஒன்று சேர்ந்து செயலாற்ற வேண்டும். வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினருக்கு தமிழக மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com