சிறுபான்மையினருக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டது: ஆதவ் அர்ஜுனா

திமுக கடந்த 10 வருடமாக, வெற்றி பெறுவதற்கு காரணம் பாஜக எதிர்ப்பு மனநிலைதான் காரணம் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.
ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா
Published on: 

சென்னை பெரியமேட்டில் தவெக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் திமுகவை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:

திமுகவின் சட்டப்பேரவை தீர்மானம் வேறு இன்றைய நிலைப்பாடு வேறு. பாஜகவின் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு அளித்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. முதல்வர் ஒரு தீர்க்கதரிசி, என்ன நடக்கும் என்பதை 6 மாதங்களுக்கு முன்பே கூறினார். திமுக - பாஜக ரகசிய கூட்டணி என்று 6 மாதங்களுக்கு முன்பே கூறியவர் நம் முதல்வர் விஜய். பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக. இது இப்போது வெளிப்படையாகவே தெரிகிறது

நாங்கள் மட்டும்தான் கொள்கை தலைவர்கள் என்று சொன்னார்கள். இன்று பெரியாருக்கே விபூதி அடித்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உக்காந்து கொண்டு பேசுற பேச்சை பாருங்க.. திமுக மிகப்பெரிய துரோகம் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி மட்டுமில்லை. திமுக கடந்த 10 வருடமாக, வெற்றி பெறுவதற்கு காரணம் பாஜக எதிர்ப்பு மனநிலை. சிறுபான்மையினருக்கு திமுக துரோகம் இழைத்துவிட்டது" இவ்வாறு அவர் கூறினார்.

X