நாங்கள் கேட்ட தொகுதிகளை தர திமுக முன்வந்துள்ளது - திருமாவளவன் பேட்டி

தொகுதிகளை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என திருமாவளவன் கூறினார்.
நாங்கள் கேட்ட தொகுதிகளை தர திமுக முன்வந்துள்ளது - திருமாவளவன் பேட்டி
Published on

சென்னை,

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வி.சி.க தலைவர் திருமாவளவன் முன்னிலையில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, 6 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகளில் வி.சி.க போட்டியிடுகிறது.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எந்தெந்த தொகுதிகளில் விசிக போட்டியிட உள்ளது? என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது;

”திமுக தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவுடன் தொகுதிகளை அடையாளம் காணும் பேச்சுவார்த்தை மேற்கொண்டோம். இன்னும் இறுதி செய்யவில்லை. நாளை இறுதி செய்யப்படும். நாங்கள் கேட்ட தொகுதிகளை திமுக தர முன்வந்துள்ளது. இன்னும் ஒரு சில தொகுதிகளை அடையாளம் காண பேச்சுவார்த்தை நடைபெறுகிறது."

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com