தமிழகத்தைப் போதைப்பொருட்களின் கூடாரமாக மாற்றிய திமுக - நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

விழுப்புரத்தில் கஞ்சா போதையில் அராஜகம் செய்தோரைத் தட்டிக்கேட்ட நான்கு வாலிபர்களைப் போதை கும்பல் அரிவாளால் தாக்கிய காணொளியும், செங்கல்பட்டில் கஞ்சா போதை கும்பல் ஒன்று சிறுவர்களையும் இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கி அச்சுறுத்தும் காணொளியும் வெளியாகியிருப்பது மனதைப் பதைபதைக்கச் செய்கிறது.

ஐந்தாண்டுகளாகத் தெருவெங்கும் தலைவிரித்தாடும் கஞ்சா புழக்கத்தால், புத்தகத்தை ஏந்த வேண்டிய தமிழக இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்திப் பொதுமக்களின் பாதுகாப்பைப் பறிக்கும் குற்றவாளிகளாக உருமாறி வருகின்றனர்.

தனது திறனற்ற நிர்வாகத்தால், தமிழகத்தைப் போதைப் பொருட்களின் கூடாரமாக மாற்றிய திமுக, இனி ஒருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், தமிழகமே வன்முறையின் தொட்டிலாக மாறிவிடும்! எனவே, தமிழகத்தைக் காக்க திமுகவை நிராகரிப்போம்! போதையில் இருந்து இளைஞர்களை மீட்போம்! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com