தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் என்று தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Published on

திருப்பூர்,

தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மற்றும் சேனாதிபதி கால்நடை ஆராய்ச்சி மையம் சார்பில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் முள்ளிபுரத்தில் கால்நடை திருவிழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு தயாராகி விட்டனர். அ.தி.மு.க. ஆட்சி, மோடிக்கு அடிமையாக உள்ளது. தமிழர்களின் உரிமை டெல்லியில் அடமானம் வைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் சமையல் பொருட்கள், கியாஸ் சிலிண்டர்கள், பெட்ரோல் விலை மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு அடியோடு ரத்து செய்யப்படும். மாணவர்களின் கல்வி கடன், விவசாயிகளின் கடன் ரத்து செய்யப்படும். ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு கொண்டுவந்தது. பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியாவிலேயே குரல் கொடுக்கிற ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். இருவரும் யார் சிறந்த அடிமை என போட்டி போட்டு அடிமையாக இருக்கிறார்கள். மோடியால் கை உயர்த்தப்பட்ட டிரம்ப்பின் கதி என்னவோ அதுதான் ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கும் ஏற்படும்.

பிரதமர் மோடி ஒரு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. எனவே பொதுமக்களின் பிரச்சினைகள் தீர வேண்டும் என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com