கருணாநிதி நினைவு தின பேரணியில் கலந்து கொண்ட சென்னை கவுன்சிலர் திடீர் உயிரிழப்பு..!

கருணாநிதி நினைவு தின பேரணியில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி கவுன்சிலர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கருணாநிதி நினைவு தின பேரணியில் கலந்து கொண்ட சென்னை கவுன்சிலர் திடீர் உயிரிழப்பு..!
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், தி.மு.க.வினர் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதி பேரணி சென்றனர்.

இந்த பேரணியில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்ட சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க.வின் கழகத் தலைமை செயற்குழு உறுப்பினரும், 146வது வார்டு கவுன்சிலருமான ஆலப்பாக்கம் சண்முகத்திற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மறைந்த மாநாகராட்சி உறுப்பினர் சண்முகம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com