ரெட்டணையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

ரெட்டணையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ரெட்டணையில் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
Published on

மயிலம், 

விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஆரணி நாடாளுமன்ற தொகுதி மற்றும் மயிலம் சட்டமன்ற தொகுதி பாக (வாக்குச்சாவடி) முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் ரெட்டணையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மயிலம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சருமான செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது, இளைஞர்களை அதிக அளவில் உறுப்பினர்களாக சேர்த்து, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற பாடுபட வேண்டும். திருவண்ணாமலையில் நடைபெற இருக்கிற பாக முகவர்கள் மண்டல மாநாட்டிற்கு வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, விழுப்புரம் வடக்கு மாவட்டம் சார்பில் திண்டிவனம், மயிலம், செஞ்சி ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என்றார். இதில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் வக்கீல் சேதுநாதன், டாக்டர் மாசிலாமணி, செந்தமிழ்செல்வன், தீர்மான குழு உறுப்பினர் செஞ்சி சிவா, மாவட்ட அவை தலைவர் சேகர், ஒன்றிய செயலாளர்கள் மணிமாறன், செழியன், அண்ணாதுரை, ராஜாராம், துரை, இளம்வழுதி, ஒன்றியக்குழு தலைவர்கள்அமுதா ரவிக்குமார், யோகேஸ்வரி மணிமாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் சீனி.சின்னசாமி, பொதுக்குழு உறுப்பினர் வீடூர் ரவி, விவசாயி அணி மாவட்ட துணை தலைவர் நெடி சுப்பிரமணி, சாந்தி ஏழுமலை உள்பட பாக முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com