திமுக பல சோதனைகளை கடந்து வந்த இயக்கம் - கனிமொழி எம்.பி பேட்டி

பொய் வழக்குகளால் அச்சிறுத்தி விடலாம் என திரும்ப திரும்ப அரசு நினைக்கிறது என கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

திமுக பல சோதனைகளை கடந்து வந்த இயக்கம்
Published on: 

மதுரை

எத்தனையோ சோதனைகளைக் கடந்து வந்த இயக்கம் திமுக. இங்கு இருப்பவர்கள் யாரும் பயப்படக் கூடியவர்கள் அல்ல என மதுரையில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.

மதுரையில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுகவை பழிவாங்க கூடிய வகையில் எல்லா முன்னாள் அமைச்சர்கள் மீதும் வழக்குகள் போட்டு அவர்கள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் திரும்ப திரும்ப பொய் வழக்குகள் போட்டு அவர்களை அச்சுறுத்தி விடலாம் அவர்கலை விமர்சிக்காமல் நிறுத்தி விடலாம் என்ற நினைப்பில் இதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

திமுக எத்தனையோ பல சோதனைகளை கடந்த வந்த இயக்கம். இதில் இருக்க கூடிய யாரும் பயப்பட கூடியவர்கள் அல்ல. எத்தனை பொய் வழக்குகள் போட்டாலும் எல்லா வழக்குகளிலும் வெற்றி பெற்று தாண்டி நிற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X