இந்து மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க.உள்ளது - பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி

இந்து மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க.உள்ளது என்று பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
இந்து மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க.உள்ளது - பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி
Published on

கோவை,

1998-ம் ஆண்டு நடைபெற்ற கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தல் தேசியவாதிகளுக்கும் தேச விரோதிகளுக்கும் எதிரான போட்டி. இந்து மற்றும் தமிழ் கலாசாரத்திற்கு எதிராக தி.மு.க.உள்ளது. கருப்பர் கூட்டம் உள்ளிட்டவற்றை தி.மு.க.தான் இயக்குகிறது.

இந்து ஒற்றுமை, இந்து கடவுளை அவமதிப்பவர்களை தி.மு.க ஆதரிக்கிறது. வெற்றிவேல் யாத்திரை தமிழ்நாட்டில் சிறப்பான வெற்றியை அளித்தது. தி.மு.க.வினர் வேல் தூக்குவதன் மூலம் இதனை தெரிந்து கொள்ளலாம். இந்துக்களை அவமதித்து பேசும் திருமாவளவன் போன்றவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதபோது, கல்யாணராமனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தது காவல் துறை ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்பதை காட்டுகிறது.

கோவை குண்டுவெடிப்பில் 58 பேர் மரணம் அடைந்தது, 250 பேர் காயமடைந்தது வீணாக போக கூடாது என்றால் தி.மு.க வை தோற்கடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com