தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பிம்பத்தை உருவாக்க திமுக முயற்சி:அமைச்சர் நிர்மல் குமார்

கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியது தவறு என்று நிர்மல் குமார் கூறினார்.
 நிர்மல் குமார்
நிர்மல் குமார்
Published on: 

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற பெரிய கட்டமைப்பை திமுக உருவாக்கி வருகிறது. குற்ற பிண்ணி உடைய 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளர்கள். போக்சோ வழக்குகள் மட்டும் 6,700 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 2,800 போக்சோ வழக்குகள் மே 10 க்கு முன்பாக புகார் கொடுத்து வழக்குகள் பதிவு செய்யாமல் இருந்தது. அந்த வழக்கையும் சேர்த்து பதிவு செய்து இருக்கிறோம். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.

மக்கள் பணிகளில் 100 சதவீதம் கவனம் செலுத்தி வருகிறோம். குடிபோதை, தகாத உறவு, தனிப்பட்ட சண்டை போன்ற காரணங்களால்தான் கொலைகள் நடைபெற்றுள்ளன. மு.க. ஸ்டாலின் போன்று வீட்டில் தூங்கிவிட்டு, மாப்பிள்ளையும் மகனும் நிர்வாகம் செய்யவில்லை. நேரடியாக முதல் அமைச்சர் விஜய் விசாரிக்கிறார். நேரடியாக கண்காணிக்கிறார். அடுத்த 6 மாதத்தில் 10 ஆயிரம் காவலர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தீபாவளி நாளில் 8 கொலைகள் நடைபெற்றன. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன, அனைத்தையும் ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீதான புகார் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியது தவறு” என்றார்.

X