தி.மு.க. மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவ போகிறது: எச்.ராஜா

தமிழகத்துக்கு இது முக்கியமான தேர்தல் என எச்.ராஜா கூறினார்.
தி.மு.க. மிகப்பெரிய அளவில் தோல்வியை தழுவ போகிறது: எச்.ராஜா
Published on

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது;

மக்கள் தொகை அடிப்படையில் திருத்தம் கொண்டு வந்தால் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்கள் பாதிக்கப்படாது. ஆனால், தமிழகம், கேரளா ஆகியவை பாதிக்கும். இதனால் எந்த மாநிலமும் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக பழைய விகிதாசாரம் மாறாத வகையில் தொகுதிகள் மறுவரையறை மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது.

இதுகுறித்து பிரதமர், உள்துறை அமைச்சர் தெளிவாக பேசிவிட்டனர். அதன்பின்னரும் ஸ்டாலின் தேவையில்லாத பிரச்சனையை கிளப்பி வருகிறார். ஸ்டாலினுக்கு ஜூரம் வந்துவிட்டது. தோற்க போகிறோம் என்ற பயத்தில் உள்ளார். பேசுவதற்கு விஷயம் இல்லாத காரணத்தால் சம்பந்தமின்றி பேசுகிறார். இந்த தேர்தல் தமிழகத்துக்கு முக்கியமான தேர்தல். கடந்த 10 நாட்களில் தேர்தல் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய அளவில் தி.மு.க. தோல்வியை தழுவ போகிறது.”

இவ்வாறு அவர் பேசினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com