

அமைச்சர் பேட்டி
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ் பத்திரியில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் அருண்ராஜ் நேற்று திடீர் ஆய்வு மேற் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-சென்னையில் இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கத்தை சேர்ந்த நர்சுகள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு வரை போராட் டத்தில் ஈடுபட்டனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு, நர்சுகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுக்கக்கூடிய முயற்சியில் இருக்கிறது.
ஆனால் சுகாதார பணியாளர்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளரிடமோ, என்னிடமோ கூறவில்லை. அப்படி இருக்கும் போது, போராட்டம் தான் முதல்முயற்சியாக செய்வது வருத்தமாக உள்ளது.மேலும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். அப்போது தலைமை செயலகத்திற்கு வந்த 10 பேர் கொண்ட போராட்ட குழுவினர், முன்னாள் தி.மு.க. அமைச்சர் மனோ தங்கராஜூவும் வருவார் என்றனர். போராட்டம் நடத்திய சுகாதார பணியாளர்களுக்கும், மனோ தங்கராஜூவுக் கும் என்ன சம்பந்தம். நாங்கள் சுகாதார பணியாளர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்க தயாராக தான் இருந்தோம்.
ஆனால் மனோதங்கராஜ் விடாப் பிடியாக நானும் கூட வருவேன் என்று அங்கு ஒரு அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினார். இதனால் தான் அந்த சந்திப்பு நடைபெறாமல் போனது. இந்த விஷயத்தில் தி.மு.க.வினர் தேவையில்லாமல் அரசியல் செய்கின்றனர். அரசுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் இடையே நடக்க வேண்டிய பேச்சுவார்த்தை தாமதம் ஆனதற்கு முன்னாள் அமைச்சர் குறுக்கீடு தான் காரணம்.
போராடுபவர்களை த.வெ.க. அரசு கண்டு கொள்ளவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அது முற்றிலும் தவறு. நாங்கள் போராட்டம் நடத்திய சுகாதார பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொடர்ந்து அழைத்துக்கொண்டு தான் இருந்தோம். நிச்சயம் அவர்களுடைய கோரிக்கைகளை ஆய்வு செய்து, சுமுகமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
தொகுப்பூதியத்தில் பணியாற்றும் நர்சுகள், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி நீண்டகாலமாக போராடி வருகின்றனர். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 2,500 நர்சுகளை பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் தெரிவிக் கப்பட்டு இருந்தது. அதற்கான அரசாணை 2 அல்லது 3 வாரங்களில் வெளியி டப்பட இருக்கிறது. மேலும் 1,695 புதிய செவிலியர் பணியிடங்களை உருவாக்க உள்ளோம். இதுமட்டுமின்றி காலியாக உள்ள 4,724 செவிலியர் பணியிடங்க ளுக்கு அந்தந்த மாவட்ட நலச்சங்கங்கள் மூலம் நிரப்புவதற்கு அரசாணை வந்து விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.