தி.மு.க. ஆட்சியில் மக்கள், குழந்தைகள் குடிப்பதற்கு கூட பால் இல்லாத ஒரு அவல நிலை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் தி.மு.க. அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
தி.மு.க. ஆட்சியில் மக்கள், குழந்தைகள் குடிப்பதற்கு கூட பால் இல்லாத ஒரு அவல நிலை - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
Published on

மதுரை

தமிழக சட்டமன்ற எதிர்க் கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் பால் கொள்முதல் விலை உயர்த்தக் கோரி இன்று முதல் ஆவினுக்கு பால் நிறுத்த போராட்டம் நடத்தப்பட இருப்பதாக பால் உற்பத்தி யாளர்கள் அறிவித்துள்ளனர். பராமரிப்பு செலவு அதிகரித்து இருப்பதால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுவதால், ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படும் ஒரு லிட்டர் பசும்பாலுக்கு 42 ரூபாயும், எருமைப்பாலுக்கு 51 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பால் உற்பத்தியாளர்கள் போராடி வருகிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பத்தாண்டுகளில், பால் தட்டுப்பாடு என்றால் என்ன என்ற நிலை இருந்தது. தற்போது மாறி, இன்றைக்கு மக்கள் குடிப்பதற்கு பால் இல்லாத ஒரு அவல நிலை தி.மு.க. ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மாவின் ஆட்சிக்கா லத்திலும் சரி, எடப்பாடியார் ஆட்சி காலத்திலும் சரி, 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகளாக, ஒரு நாளைக்கு தேவையான அளவு பால் கொள்முதல் செய்யப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையில்லாமல் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

ஆனால் தி.மு.க. ஆட்சியில் பாலின் தரத்தை குறைத்தும், அதிக அளவில் இருக்கும் பாலுக்கு 12 ரூபாயாக உயர்த்தியும், இரண்டாம் ரகமாக விற்கும் பாலில் கொழுப்பு சத்தை ஒரு சதவீதம் குறைத்ததும், ஆவின் பொருள்களின் தயிர், மோர், நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பால் பவுடர் போன்ற இதர பொருள்களின் விலையை தாறுமாறாக உயர்த்தி, தனியார் நிறுவனங்கள் பயன டைய வழிவகை செய்ததும், 50 சதவீதத்திற்கு மேல் முக வர்களுக்கு பால் சப்ளையை குறைத்ததும், முக்கியமாக பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பால் கொள்முதலை குறைத்ததால், இதன்கார ணமாக பால் உற்பத்தி யாளர்கள் தனியார் நிறுவ னங்களுக்கு தங்களுடைய பாலை விற்க தொடங்கி இருக்கிறார்கள்.

இது போன்ற காரணங்களால் தமிழக முழுவதும் ஆவின் பாலுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றைக்கு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்த பால் உற்பத்தியாளர் அறி விப்பு கொடுத்திருக்கிறார்கள். ஆகவே இந்த நிலை தொடர்ந்தால், பச்சிளங் குழந்தைகள் குடிப்பதற்கு கூட பால் இல்லாத நிலை ஏற்படும் என்பதை அரசு அறிந்திருக்கிறதா? என்பது தான் இன்றைய வேதனை யான கேள்வியாக இருக்கிறது.

ஆவின் பால் தட்டு பாட்டால் மக்கள் கவலையில், துயரத்தில், வேதனையில் இருக்கிறார்கள். தி.மு.க. அரசு பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com