

சென்னை,
பாரதிய ஞானபீட அமைப்பால் 1961-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு, 1965 முதல் ஆண்டுதோறும் இந்திய எழுத்தாளர்களுக்கு ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே இந்த உயரிய விருதை பெற்றுள்ளனர்: அகிலன் (1975): இவரது சமூக நாவலான 'சித்திரப்பாவை' என்ற படைப்பிற்காக முதன்முதலில் தமிழில் இந்த விருது வழங்கப்பட்டது.ஜெயகாந்தன் (2002) தமிழ் இலக்கிய உலகிற்கு இவர் ஆற்றிய ஒட்டுமொத்த வாழ்நாள் சாதனைக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
24 ஆண்டுகள் கழித்து, தமிழ் இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக கவிதைக்காக இந்த விருதை வைரமுத்து பெறுகிறார். மேலும், ஞானபீட விருதை பெறும் மூன்றாவது தமிழர் கவிஞர் வைரமுத்து ஆவார்.
கவிப்பேரரசு வைரமுத்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். வரும் ஜூலை 13-ஆம் தேதி, தனது பிறந்தநாளன்று டெல்லியில் நடைபெறவுள்ள 60-ஆவது ஞானபீட விருது வழங்கும் விழாவிற்கான அழைப்பிதழை அவரிடம் வழங்கினார். விருதை பெறவுள்ள வைரமுத்துவுக்கு ஸ்டாலின் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.