தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தேனாம்பேட்டையில் தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை
Published on

சென்னை,

தமிழக அரசின் விளையாடுத்துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க. இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள தி.மு.க. இளைஞரணி நிர்வாகிகளை மண்டல வாரியாக பிரித்து அவர்களோடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.

ஏற்கனவே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மண்டலங்களைச் சேர்ந்த இளைஞரணி நிர்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தியிருந்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது மீண்டும் இளைஞரணி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com