தி.மு.க. எம்.எல்.ஏ. நடத்திய பிரம்மாண்ட மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்

தஞ்சையில் தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக் குமார் நடத்திய மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூலானது.
தி.மு.க. எம்.எல்.ஏ. நடத்திய பிரம்மாண்ட மொய் விருந்தில் ரூ.11 கோடி வசூல்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பட்டுக்கோட்டை சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. அசோக் குமார், தனது பேரக்குழந்தைகளின் காதணி விழாவை முன்னிட்டு பிரம்மாண்டமான முறையில் மொய் விருந்து நடத்தினார்.

இந்த விருந்துக்காக 100 ஆட்டுக்கிடாய்கள் வெட்டப்பட்டு, 1,300 கிலோ கறியுடன் பெரிய அண்டாவில் மட்டன் குழம்பு, குடல் கூட்டு மற்றும் அரிசி சோறு சமைக்கப்பட்டிருந்தது. இந்த கறி விருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விருந்தில் பங்கேற்றவர்கள் சாப்பிட்டு முடித்ததும் 1,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை தங்கள் வசதிக்கு ஏற்ப மொய் எழுதிச் சென்றனர். இதற்காக பணம் எண்ணும் இயந்திரத்துடன் 40 கவுண்ட்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாலையில் வங்கி அதிகாரிகள் விழா நடந்த இடத்திற்கு வந்து வசூலான பணத்தை எண்ணத் தொடங்கினர்.

இதில் 11 கோடி ரூபாய் மொய் பணம் வசூலாகி இருந்தது. தனிநபர் நடத்திய மொய் விருந்தில் இதுவே அதிகபட்ச வசூல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com