திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் மர்ம நபர்களால் உடைப்பு

திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் காரை, மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் மர்ம நபர்களால் உடைப்பு
Published on

திருச்செந்தூர்,

தட்டார்மடம் அருகே செல்வன் என்பவர் கடத்திக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்ளிட்டோரை கைது செய்ய கோரி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 4வது நாளாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நேரில் சந்தித்து திருச்செந்தூர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்ததோடு, போராட்டத்திலும் பங்கேற்றார். இந்த நிலையில் அவரது சொந்த ஊரான தண்டபத்திலுள்ள வீட்டு முன்பு நின்றிருந்த காரை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மெஞ்ஞானபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com