

சென்னை,
சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய கட்சி கூட்டம் அதன் செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கி நடந்து வருகிறது.
சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூட உள்ள நிலையில் இந்த கூட்டம் இன்று கூடியுள்ளது. ஏப்ரலில் உள்ளாட்சி தேர்தல் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதில் வெற்றி பெறுவது பற்றி ஆலோசனை மற்றும் போக்குவரத்து தொழிலாளர் பிரச்னை, ஒகி புயல் பாதிப்பு ஆகியவை பற்றி கூட்டத்தில் பேசப்படும் என தகவல் தெரிவிக்கின்றது.