மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடக்கிறது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. அதனை தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது. தொடர்ந்து திங்கட்கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதமும் நடக்க உள்ளது.

இந்தநிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு திமுக தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள்.

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசனைகள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com