மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
Published on

சென்னை,

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மறுநாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 07-05-2026 வியாழக்கிழமை மாலை 5.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கில்” நடைபெறும்.

அதுபோது புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com