கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி வீடு திரும்பினார்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி வீடு திரும்பினார்
Published on

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூர் தில்லை கங்கா நகரில் வசிப்பவர் ஆர்.எஸ்.பாரதி. தி.மு.க. அமைப்பு செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள தயாரான எம்.பி.க்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அப்போது ஆர்.எஸ்.பாரதிக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. இதையடுத்து டெல்லியில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கலந்து விட்டு கடந்த 19-ந் தேதி சென்னை திரும்பிய அவருக்கு, தொண்டை கரகரப்பாக இருந்ததாக கூறி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில் அவர், கடந்த 23-ந் தேதி பரிசோதனை செய்தபோது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ஆதம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, 5 நாள் சிகிச்சைக்கு பின் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட அவர், வீட்டில் 14 நாள் தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com