திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை

திமுக எம்.பி. டி.ஆர்.பாலுவின் வீட்டில் நடந்த கொள்ளை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வீட்டில் கொள்ளை - போலீசார் தீவிர விசாரணை
Published on

மன்னார்குடி,

தி.மு.க. பொருளாளரும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலுவின் வீடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தளிக்கோட்டை கிராமத்தில் உள்ளது. இந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com