நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு

தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் இருந்தும் தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு
Published on

புதுடெல்லி,

நடப்பாண்டுக்கான முதல் கூட்டத்தொடரான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1-ம் தேதி மத்திய அரசின் 2024 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

பிப்ரவரி 10-ம் தேதி சனிக்கிழமையான இன்று வரை கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி இருந்தது. கடந்த சில நாட்களாக பட்ஜெட் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே மசோதாக்கள் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கையை மக்களவையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து வெள்ளை அறிக்கை மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில், தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி நாடாளுமன்ற இரு அவைகளில் இருந்தும் தி.மு.க எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com