தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை வெற்றி பெற்ற கந்தர்வகோட்டை மற்றும் கீழ்வேளூர் ஆகிய இரு தொகுதிகளையும் கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது.
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் தொகுதிகளை இறுதி செய்வதில் சிக்கல்?
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 23-ந் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 30-ந் தேதி தொடங்க இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடைபெற்று, அதே நாளில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நீண்ட இழுபறிக்கு பின் 5 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த முறை வெற்றி பெற்ற கந்தர்வகோட்டை மற்றும் கீழ்வேளூர் ஆகிய இரு தொகுதிகளையும் கொடுக்க திமுக சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற பல்லாவரம் தொகுதியை மார்க்சிஸ்ட் கேட்டு வருவதால் இன்னும் தொகுதி பட்டியல் குறித்து இறுதி செய்யப்படாமல் இருக்கிறது.

இதே போல கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள விளவங்கோடு தொகுதியையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்கிறது. இந்த தொகுதியில் கடந்தமுறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டு கொடுக்க முன்வரவில்லை. காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய இரு கட்சிகளும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியை கேட்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பட்டியல் குறித்து திமுக பேச்சு நடத்திவிட்டு மாலைக்குள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டிற்கான தொகுதிகளை இறுதி செய்யும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com